ETV Bharat / sports

ஹிட்மேன் இடத்தைப் பிடித்த ஷுப்மன் கில் - அணியிலிருந்து விலகிய ரோஹித் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக் குழுவில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Shubman Gill to replace Rohit Sharma in the Test series against New Zealand

author img

By

Published : Feb 3, 2020, 11:33 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது.

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மாவின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் ஒருநாள், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. டி20 தொடரில் நான்கு போட்டிகளில் பங்கேற்ற அவர் இரண்டு அரைசதம் உட்பட 140 ரன்கள் அடித்தார்.

Rohit Sharma
ரோஹித் சர்மா

இதையடுத்து, டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளார் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். 20 வயதான இவர், தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறார்.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 279 பந்துகளில் 22 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் உட்பட 204 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். நியூசிலாந்து மண்ணில் இத்தகைய ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதால்தான் அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 21 வெலிங்டனில் தொடங்கவுள்ளது. முன்னதாக, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இன்னும் பிசிசிஐ உறுதி செய்யவில்லை.

இதையும் படிங்க: இந்திய அணிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அபராதம்!

Intro:Body:

dd

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.