ETV Bharat / sports

’இந்தியாவின் 4ஆம் இடத்திற்கு இந்தப் பையன்தான் செட் ஆவான்’ - இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்! - இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன்

இந்தியாவின் நான்காம் இடத்துக்கும் எந்த வீரர் சரியாக இருப்பார் என்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

Shreyas Iyer
Shreyas Iyer
author img

By

Published : Dec 10, 2019, 10:56 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் மிகப்பெரும் பிரச்னை நான்காம் இடத்தில் யாரை களமிறக்குவது என்பதுதான். இதற்காக இந்திய அணி மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் என பல வீரர்களை சோதனை செய்தது.

ஆனால் இதில் எந்த வீரரும் ஒருநாள் போட்டிகளில் நான்காம் இடத்திற்கு செட் ஆகவில்லை. இறுதியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை பயன்படுத்தலாம் என நினைத்தபோது அவரை உலகக்கோப்பை தொடருக்கு பின் அணியில் கூட சேர்க்காமல் உள்ளது இந்திய அணி.

சமீபகாலமாக இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் நான்காம் இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன்

தற்போது அவருக்கு ஆதரவளிக்கு விதத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நான்காவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவது சரியாக இருக்கும். மேலும் அவர் ஆஃப் சைடு திசையில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைவார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி..எஸ். லக்ஷ்மண், இந்திய அணியின் நான்காம் வரிசைக்கு ஸ்ரேயாஸ் ஐயர்தான் சரியாக இருப்பார் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெற்காசிய விளையாட்டுப் போட்டி: பதக்க பட்டியலில் புதிய சாதனைப் படைத்த இந்தியா!

Intro:Body:

Shreyas Iyer should focus on off-side batting: Pietersen

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.