ETV Bharat / sports

மனைவிக்காக புல்லாங்குழல் இசைக் கலைஞராக மாறிய தவான்! - இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிக்கர் தவான்

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், புல்லாங்குழல் இசைக்கும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Shikhar Dhawan plays flute to beat lockdown blues

author img

By

Published : May 16, 2020, 11:24 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியாக மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவிற்கான வேலைப்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மேலும், இப்பெருந்தொற்றால் ஐபிஎல் உள்பட அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள தங்களது நேரத்தை கழிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் அதிகமாக உலா வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளார்.

காரணம், மனைவிக்கு உதவி செய்வது, துணி துவைப்பது, மகனுடன் குத்தாட்டம் ஆடுவது, மாஸ் டயலாக்கிற்கு மாஸாக டப்பிங் செய்வது என பல்வேறு திறமைகளை தன்னுள் வைத்துள்ளார். தற்போதும் அப்படி ஒரு திறமையைதான் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷிகர் தவான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவிக்காக புல்லாங்குழலை இசைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது அந்த பதிவில் ‘அமைதியும், பொறுமையும் இருந்தால் இது உங்கள் இதயத்துடன் ஒன்றிணையும்’ என பதிவிட்டு குழல் இசைக்கும் காணொலியையும் இணைத்துள்ளார்.

குழல் ஊதுபவனாக மாறிய தவான்
குழல் ஊதுபவனாக மாறிய தவான்

இதையும் படிங்க: 'டென்னிஸில் சாதனை படைப்பதே எனது கனவு' - ஜோகோவிச்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.