ETV Bharat / sports

மயாங்கிற்குப் பதில் ரோஹித் கன்ஃபார்ம்:  சைனியா, ஷர்துலா டவுட்டு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்குவது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக யார் இடம்பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Shardul or Saini big question; Rohit set to replace Mayank in playing XI for 3rd Test

author img

By

Published : Jan 5, 2021, 7:52 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை மறுநாள் இந்திய அணி விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில், ஓராண்டிற்குப் பிறகு அணியில் இணைந்திருக்கும் அதிரடி வீரர் ரோஹித் சர்மா இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் ரோஹித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளதால், தொடக்க வீரராக களமிறங்கிவந்த மயாங்க் அகர்வால் அடுத்த போட்டியில் களமிறங்க மாட்டார் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் இந்தத் தொடரில் அவர் பங்கேற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்து, அவர் விளையாடும் அணியில் தேர்வுசெய்யப்பட மாட்டார் என்றே தெரிகிறது.

ஆனால் காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகியுள்ளதால், அவரது இடத்தை நிரப்புவது யார் என்ற போட்டி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதில் சைனி, நடராஜன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் முகமது ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்களில் யார் விளையாடும் லெவனில் இடம்பெறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

இதில் அறிமுக வீரரான நடராஜனுக்கு வாய்ப்புகள் அதிகம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தாலும், அவர் முதல் தரப்போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்ற வாதமும் எழுந்துவருகிறது. இதனால் நிச்சயம் இப்போட்டி ஷர்துல், சைனிக்கு இடையேயான போட்டியாகத்தான் வல்லுநர்கள் பார்த்துவருகின்றனர்.

ஆனால் அணி நிர்வாகம், பயிற்சியாளர், கேப்டனின் முடிவு என்ன என்பது விளையாடும் லெவன் அணியை அறிவிக்கும்போதுதான் தெரியவரும் என்பது எவராலும் மறுக்க முடியாது.

உத்தேச அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே (கே), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் (அ) நவ்தீப் சைனி.

இதையும் படிங்க:இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.