ETV Bharat / sports

T10 league: வீணான வாட்சனின் அரை சதம் - த்ரில் வெற்றி பெற்ற வாரியர்ஸ்!

author img

By

Published : Nov 22, 2019, 10:58 AM IST

அபுதாபி: டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் கிளாடியேடர்ஸ் அணியை வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது.

T10 league deccan gladiators

டி10 லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று அபிதாபியில் நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணியை எதிர் கொண்டது.

இதில் முதலில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய சிம்மன்ஸ் 39 பந்துகளில் 70 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் வாரியர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்களை எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டல் சிம்மன்ஸ் 70 ரன்களை எடுத்தார். டெக்கான் அணி சார்பில் பென் கட்டிங், ஸாஹூர் கான் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 108 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, களமிறங்கிய டெக்கான் அணியில் கேப்டன் வாட்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய வாட்சன் 35 பந்துகளில், 75 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருப்பினும், அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் டெக்கான் அணியால் 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் நார்த்தன் வாரியர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:நவம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது ஐ-லீக் கால்பந்து தொடர்

Intro:Body:

T10 league deccan gladiators 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.