தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் ஹென்ரிக்ஸ், ப்ரிட்டோரியஸ் மற்றும் கேப்டன் டுமினி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதில் அதிகமாக ஹென்ரிக்ஸ் 66 ரன்களும், ப்ரிட்டோரியஸ் 77 ரன்களும் எடுத்தனர்.
![henricks](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2797194_henricks.jpg)
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் டிக்வெல்லா மட்டும் நிதானமாக ஆட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 11-வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு, 35 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
![south african bowler](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2797194_udana.jpg)
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, 15.4 ரன்களில் 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி டிஆர்எஸ் முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக ப்ரிட்டோரியஸ்-ம், தொடர் நாயகனாக ஹென்ரிக்ஸ்-ம் தேர்வு செய்யப்பட்டனர்.