உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், அந்த அணியின் வீரர் சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தனது கணவரின் ஓய்வு முடிவு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, "ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் வாழ்வைப் பொருத்தவரை ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான்" என்றும் கூறியுள்ளார்.

மேலும், "20 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதைப் பெருமையாக எண்ணுகிறோம். தங்களது சாதனைகளை எண்ணி தானும், மகன் இஷானும் பெருமைப்படுகிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.