ETV Bharat / sports

அதிரடி ஆல்ரவுண்டருக்கு பாகிஸ்தான் குடியுரிமை; உற்சாகத்தில் பாக். ரசிகர்கள் - honourary citizenship of Pak

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமிக்கு பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Sammy to be given honourary citizenship of Pak on March 23

author img

By

Published : Feb 22, 2020, 5:24 PM IST

பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல், குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பின் எந்த நாட்டு வீரரும் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளைப் போலவே பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானில் பல நட்சத்திர வீரர்களும் விளையாட மறுப்பு தெரிவித்ததால், இரண்டு சீசன்கள் துபாயில் நடத்தப்பட்டது. அதனையடுத்து 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இனிவரும் அனைத்து பிஎஸ்எல் தொடர்களும் பாகிஸ்தானில் நடத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கியது. ஆனால் பல வீரர்கள் மீண்டும் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான டேரன் சமி மட்டும் பாகிஸ்தானில் விளையாட ஒப்புதல் தெரிவித்தார். மேலும் தற்போது வரை பாகிஸ்தானில் நடைபெற்ற அனைத்து பிஎஸ்எல் தொடர்களிலும் பங்கேற்று, தான் கேப்டனாக செயல்பட்ட பெஷாவர் ஜால்மி அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார்.

இதன் காரணமாக பெஷாவர் ஜால்மி அணியின் உரிமையாளரான ஜாவித் அப்ரிதி, அந்நாட்டு அதிபருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குச் செய்த சேவைக்கும், மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுவதில் முக்கியப் பங்காற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமிக்கு கவுரவக் குடியுரிமை வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

  • President of Pakistan Dr @ArifAlvi will confer the highest civilian award and honourary citizenship to Darren Sammy on 23 March for his invaluable contribution to cricket in Pakistan. pic.twitter.com/mn9AiLknB0

    — PCB Media (@TheRealPCBMedia) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையேற்ற பாகிஸ்தான் அதிபரும் டேரன் சமிக்கு பாகிஸ்தானின் குடிமகனுக்கும் வழங்கும் மிக உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் விருதையும், கவுரவ குடியுரிமையையும் வழங்கிட வேண்டுமென தெரிவித்தார். இதனையேற்ற பாகிஸ்தான் அரசும் வரும் மார்ச் 23ஆம் தேதி நடைபெரும் ஒரு விழாவில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமிக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜடேஜாதான் எனக்குப் பிடித்த கிரிக்கெட்டர் - ஆஷ்டன் அகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.