கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியா முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுதலினால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, நாளை (ஏப்ரல் 24) 47 ஆவது பிறந்தநாள். ஆனால் தற்போது நாட்டில் நிலவிவரும் கரோனா வைரஸ் தாக்கத்தினால், மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என சச்சின் முடிவு செய்துள்ளதாக, சச்சினின் நெருக்கமானவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடப் போவத்தில்லை. இதனை செய்வதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிராக போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பாதுகாப்பு பணியாளர்களுக்கு செய்யும் மிகப்பெரும் மரியாதையாக இருக்கும் என்று சச்சின் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ வெளியிட்ட #TeamMaskForce விழிப்புணர்வு காணொலியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்று, வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தவான் மகனுடன் இணைந்து அசத்தும் ‘குவாரண்டைன் பிரீமியர் லீக்’!