இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட வயதை சார்ந்தவர்களும் நேற்று நண்பர்கள் தினத்தை கொண்டாடினர். இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நண்பர்கள் தினத்தன்று ஐசிசியின் விதிமுறையை கிண்டல் செய்யும் விதமாக கிண்டலான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர், தனது நெருங்கிய நண்பரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து கிரிக்கெட் வீடியோ கேம் விளையாடி நண்பர்கள் தினத்தை கொண்டாடினார். அப்போது, ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் வைத்துக்கொள்ளலாமா என வினோத் காம்ப்ளி சச்சினிடம் கேட்டார். அதற்கு, நட்பில் எந்த பவுண்ட்ரி (எல்லை) இல்லை என சச்சின் பதிலளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, ரசிகர்களே! நட்பில் எந்த ஒரு எல்லையும் இல்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
-
Happy #FriendshipDay guys... always remember that there are 'No boundaries' in friendship! 😉@vinodkambli349 pic.twitter.com/qe6hT7Y7lx
— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy #FriendshipDay guys... always remember that there are 'No boundaries' in friendship! 😉@vinodkambli349 pic.twitter.com/qe6hT7Y7lx
— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2019Happy #FriendshipDay guys... always remember that there are 'No boundaries' in friendship! 😉@vinodkambli349 pic.twitter.com/qe6hT7Y7lx
— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2019
சச்சினின் இந்த கிண்டல் பதிவு இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்ட்ரி விதிமுறைப்படி இங்கிலாந்து அணி சாம்பியன் என்று ஐசிசி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.