ETV Bharat / sports

சென்னை தாஜ் ஹோட்டல் ஊழியரைச் சந்திக்க விரும்பும் லிட்டில் மாஸ்டர்!

author img

By

Published : Dec 14, 2019, 2:04 PM IST

சென்னை: சச்சினுக்கு அறிவுரைக் கூறிய தாஜ் கோரமண்டல் ஊழியரை சந்திப்பதற்கு ரசிகர்கள் உதவ வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sachin-seeks-netizens-help-to-findout-person-advice-him-on-his-elbow-gaurd-to-play

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களை எப்போதும் சந்தித்துவருபவர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நாளை நடக்கவுள்ள ஒருநாள் போட்டியைக் காண சென்னை வந்துள்ள சச்சின் டெண்டுல்கர் தனக்கு அறிவுரை கூறிய ரசிகர் ஒருவரை சந்திக்க விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

அதனோடு சேர்த்து வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில், ''சென்னை தாஜ் ஹோட்டலில் தங்கியபோது, எனது அறைக்கு ஊழியர் ஒருவர் காபி கொடுக்க வந்தபோது, உங்கள் பேட்டிங் குறித்து ஒரு அறிவுரை வழங்கலாமா எனக் கேட்டார். நான் சொல்லுங்கள் என்றேன். அப்போது, சார் நீங்கள் எப்போதெல்லாம் எல்போ கார்டை பயன்படுத்துகிறீர்களோ, அப்போது எல்லாம் உங்களது பேட் ஸ்விங்கில் (bat swing) வித்தியாசம் ஏற்படுகிறது.

நான் உங்களது தீவிர ரசிகன். நான் உங்கள் பேட்டிங்கை 6 முதல் 7 முறை திரும்ப திரும்பப் பார்த்ததால், எனக்கு தோன்றியதைக் கூறினேன் என்றார்.

அது எனக்கு ஆச்சரியமளித்தது. ஏனென்றால், எனது எல்போ கார்டு பிரச்னை குறித்து நான் உலகில் யாரிடமும் பேசியதில்லை. அவரின் அறிவுரைக்கு பிறகு, எனது எல்போ கார்டை சரி செய்தேன். அவரின் அறிவுரை எனக்கு பெரும் உதவியாக இருந்தது'' என்றார்.

சச்சின் டெண்டுல்கர் ட்வீட்
சச்சின் டெண்டுல்கர் ட்வீட்

தற்போது அந்த ட்வீட்டில், அறிவுரைக் கூறிய ஹோட்டல் ஊழியரை நான் பார்க்க விரும்புகிறேன். கண்டுபிடிக்க அனைவரும் உதவி செய்யவேண்டும் என தமிழில் ட்வீட் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் இந்த ட்வீட்டை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சச்சின் அழித்துவிட்டார். ஏன் அந்த ட்வீட்டை அழித்தார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் இந்த ட்வீட்டை ரசிகர்கள் ஸ்கீர்ன்ஷாட் செய்து சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ”ஆண்கள் அழுவதால் என்ன குறையுள்ளது?” - சச்சினின் உணர்ச்சிவசமான கடிதம்!

Intro:Body:

A chance encounter can sometimes be so memorable! I had met a staffer at Taj Coromandel, Chennai during a series against WI whose advice about my elbow guard helped me a lot. I wonder where he is now & wish to catchup with him. Hey netizens, can you help me find him?

https://twitter.com/sachin_rt/status/1205737788219392001

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.