ETV Bharat / sports

'நாளைய போட்டிக்கு இங்கிலாந்து ரெடி' - ஜோ ரூட்

நாளை நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக யாரும் அணியிலிருந்து விலகமாட்டார்கள் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தகவல் தெரிவித்துள்ளார்.

Root downplays illness in England camp ahead of 4th Test

author img

By

Published : Mar 3, 2021, 10:43 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை (மார்ச் 4) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக சக வீரர்களுடன் பயிற்சியிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ள ஜோ ரூட், "நாளைய போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய எங்களுக்கு நேரம் உள்ளது. மேலும் வீரர்கள் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். அதனால் நாளைய டெஸ்ட் போட்டியில் நீங்கள் எதிர்பார்க்கும் வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் பால் காலிங்வுட்டும் ஒருவர் என ஜோ ரூட் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: டி20 தரவரிசை: டாப் 10 வரிசையில் ராகுல், கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.