2019ஆம் ஆண்டில் இந்திய அணி பெரும்பாலான ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, உலகக் கோப்பையில் ஐந்து சதங்கள் விளாசிய முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் தனதாக்கிக் கொண்டார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கெளரவிக்கும் வகையில் ஐசிசி பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 28 ஒருநாள் போட்டிகளில் ஏழு சதம் உட்பட 1,490 ரன்களைக் குவித்து, கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
-
5️⃣ #CWC19 centuries
— ICC (@ICC) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
7️⃣ ODI centuries in 2019
Your 2019 ODI Cricketer of the Year is Rohit Sharma.#ICCAwards pic.twitter.com/JYAxBhJcNn
">5️⃣ #CWC19 centuries
— ICC (@ICC) January 15, 2020
7️⃣ ODI centuries in 2019
Your 2019 ODI Cricketer of the Year is Rohit Sharma.#ICCAwards pic.twitter.com/JYAxBhJcNn5️⃣ #CWC19 centuries
— ICC (@ICC) January 15, 2020
7️⃣ ODI centuries in 2019
Your 2019 ODI Cricketer of the Year is Rohit Sharma.#ICCAwards pic.twitter.com/JYAxBhJcNn
அதுமட்டுமின்றி, ஒரே ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார். 1997இல் ஜெயசூர்யா 44 இன்னிங்ஸில் 2,387 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2019இல் ரோஹித் சர்மா 47 இன்னிங்ஸில் 2,442 ரன்களை குவித்தார்.
பல்வேறு சாதனைகளால் 2019ஆம் ஆண்டை எழுதிய இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லார்ட்ஸ், லீட்ஸ் ஹீரோ பென் ஸ்டோக்ஸுக்கு கிடைத்த அங்கீகாரம்