நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்றம் குறித்து நிகழ்வில் ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் பங்கேற்றார். சுற்றுச்சுழல் ஆர்வரலான இவர், தனியொரு ஆளாகப் பருவநிலை மாற்றங்கள் குறித்து உணர்ச்சி மிக்க பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரடப்பட்டு வருகிறது.
அதேசமயம், அந்நிகழ்வில் வருகைத் தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை அவர் முறைத்த வீடியோவும் சமூகவலைதளங்கில் வைரலானது. இருப்பினும், பருவநிலை மாற்றம் குறித்து இவரது பேச்சை ட்ரம்ப் பாராட்டி தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்தார். அதுமட்டுமின்றி," பிரகாசமான மற்றும் அற்புதமான ஒரு எதிர்காலத்தைக் கொண்ட, மகிழ்ச்சியான பெண்ணாக அவர் தெரிகிறார்" என்றும் அவர் அந்த பதிவில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கிரேட்டாவை பாராட்டிய ட்ரம்ப்!
இந்நிலையில், இவரது பேச்சை பாராட்டி தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா தனது ட்விட்டர் பதிவில் ஷேர் செய்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர், நமது பூமியை (கிரகம்) பாதுகாக்கும் பொறுப்பை நமது குழந்தைகளிடம் ஒப்படைப்பது நியாமற்றது. கிரேட்டா தன்பெர்க் உங்களது பேச்சு மற்றவர்களுக்கு உத்வேத்தை தந்துள்ளது. இதற்கு மேல் எந்த ஒரு சாக்குகளும் சொல்லாமல், நமது வருங்கால சந்ததியினர் பாதுகாப்பாக இந்த பூமியில் வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம். அதற்கான மாற்றம் தற்போது வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு தனியொரு ஆளாகப் போராட்டத்தைத் தொடங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது.‘
இதையும் படிங்க: "உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!