இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது.
முன்னதாக இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இடது முழங்கைப் பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து அவர் ஸ்கோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.
இதனையடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா இதுவரை இரண்டு விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: IND vs AUS: போட்டி நடுவரிடம் ஆவேசமடைந்த டிம் பெய்ன்!