கடந்த 2017 ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஹர்மன்பிரீத் இச்சாதனையை நிகழ்த்தி மூன்று வருடங்கள் கடந்த நிலையில், இந்த மூன்று வருடங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட்டானது எழுச்சி பெற்றுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கைஃப் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், 'மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹர்மன்பிரீத் கவுர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 * (115) ரன்களை அடித்தார். அதன்பிறகான மூன்று ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் எழுச்சி பெற்றுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.