ETV Bharat / sports

‘இந்தியாவுக்காக விளையாடுவதே மிகப்பெரும் உத்வேகம்’ -  ஜூலன் கோஸ்வாமி

இந்திய அணிக்காக விளையாடுவதே எனது வாழ்வின் மிகப்பெரும் உத்வேகம் என இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

'Representing India is my biggest motivation': Jhulan Goswami

author img

By

Published : Mar 9, 2021, 8:45 PM IST

இந்திய மகளிர், தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவிய ஜூலன் கோஸ்வாமி ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிவுக்கு பின் பேசிய அவர், "இந்திய அணிக்காக விளையாடுவதே எனது வாழ்வின் மிகப்பெரும் உத்வேகம். இதனைத் தவிற வேறு எதுவும் எனக்கு உத்வேகம் அளிக்கும் என நான் நினைக்கவில்லை.

மேலும், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படாவிட்டால் அணியில் நீடிக்க முடியாது. அதனால் உடற்தகுதியை பேணுவதும், களத்தில் சிறப்பாக செயல்படுவதும் எங்களுக்கு முக்கியம். ஆனால் இது எளிதானது அல்ல" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வானவேடிக்கை காட்டிய பிரித்வி ஷா: மும்பை அணி அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.