ETV Bharat / sports

'அது உண்மை இல்லைங்க' - கேப்டன்ஷிப் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு தான் மீண்டும் கேப்டனாக செயல்பட வேண்டும் என தங்கள் நாட்டு வாரியம் வேண்டுகோள்விடுத்ததாக பரவிய செய்திகள் உண்மை இல்லை என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Reports suggesting CSA asked me to lead Proteas are not true: AB de Villiers

author img

By

Published : Apr 30, 2020, 12:19 PM IST

கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் 360, சூப்பர்மேன் என அழைக்கப்படுவர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ். தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் 2018 மே 23இல் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றார்.

இவர் ஓய்வுபெற்றபின் தென் ஆப்பிரிக்க அணியின் நிலைமை தலைகீழாக மாறியது. அதுவரை சிறப்பாக விளையாடிவந்த தென் ஆப்பிரிக்க அணி படுமோசமாக விளையாடத் தொடங்கியது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்தான். அந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றது.

டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

இதைத்தொடர்ந்து, சரிவை நோக்கிச் சென்றிருந்த தென் ஆப்பிரிக்க அணியை மீட்கும்வகையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தை இடைக்கால இயக்குநராகவும், மார்க் பவுச்சரை அணியின் பயிற்சியாளராகவும், ஜாக் காலிஸை பேட்டிங் ஆலோசகராகவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இதனிடையே, அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டி வில்லியர்ஸை சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாகப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் மீண்டும் கம்பேக் தந்தால் அவருக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

  • Reports suggesting Cricket SA have asked me to lead the Proteas are just not true. It's hard to know what to believe these days. Crazy times. Stay safe everyone.

    — AB de Villiers (@ABdeVilliers17) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இது குறித்து டி வில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது பதிவில் அவர், "தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன்னை மீண்டும் அணியை வழிநடத்துமாறு வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இக்காலக்கட்டத்தில் எதை நம்புவது என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் கடினமாக உள்ளது" எனப் பதிவிட்டார்.

இதையும் படிங்க: இந்த வீரனுக்காகதான் உலகமே ஏங்குகிறது! HBD AB De Villiers

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.