ETV Bharat / sports

பெங்களூரு அணியிலிருந்து ராஜஸ்தானுக்கு தாவிய பயிற்சியாளர்! - ஆண்ட்ரூவ் மெக்டோனால்டு

பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

andrew mcdonald
author img

By

Published : Oct 21, 2019, 6:47 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு அணிகளும் தங்களது வீரர்களை மட்டுமின்றி பயிற்சியாளர்களையும் மாற்றிவருகிறது. சமீபத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.

அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Rajasthan royals
ஆண்ட்ரூ மெக்டொனால்ட்

இவர் முன்னதாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 2009 முதல் 2011 வரையும் பெங்களூரு அணிக்காக 2012, 2013 சீசன்களிலும் விளையாடியுள்ளார். இதைத்தவிர, கடந்த சீசனில் கோலி தலைமையிலான ஆர்.சி.பி. அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடியிருந்தாலும் 93 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபம் உள்ளது. இவர் பயிற்சியாளராக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே விக்டோரியா அணி ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரை வென்றது. அதுமட்டுமில்லாமல், இவரது பயிற்சியின் கீழ் 2017-18 சீசனில் பிக் பாஷ் டி20 தொடரில் ஏழாவது இடம் பிடித்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி, கடந்த சீசனில் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் அண்டர்டாக்ஸ் அணியாக திகழும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் சீசனில் கோப்பை வென்ற பிறகு, அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவே தடுமாறிவருகிறது. இதனால், இவரது பயிற்சியின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் எழுச்சிப் பெறுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.