ETV Bharat / sports

டி20 தரவரிசை: டாப் 10 வரிசையில் ராகுல், கோலி! - முஜிப் உர் ரஹ்மான்

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் டாப் 10 இடத்திற்குள் நீடித்துவருகின்றனர்.

Rahul remains at second spot, Kohli goes up to 6th in ICC T20I rankings

author img

By

Published : Mar 3, 2021, 7:53 PM IST

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 915 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 816 புள்ளிகளுடன் இந்திய அணியின் கே.எல். ராகுல் இரண்டாம் இடத்திலும், 801 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் நீடித்துவருகின்றனர்.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 697 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 788 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர் தரவரிசையில், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் சம்ஸி இரண்டாவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரஹ்மான் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றனர். இதில் டாப் 10 வரிசையில் ஒரு இந்திய வீரரும்கூட இடம்பெறவில்லை.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் மாற்றமின்றி ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க: அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் மைக்கேல் வாகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.