இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (டிசம்பர் 17) முதல் தொடங்கவுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிசிசிஐ காணொலி உரையாடலில் பங்கேற்ற கேப்டன் விராட் கோலி, தான் இல்லாத சூழலில் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தனது பணியை சிறப்பாக செய்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, “கடந்த சில ஆண்டுகளாக எங்கள் (ரஹானே) இருவருக்கும் இடையே சிறந்த புரிதல் உள்ளது. பலமுறை நாங்கள் இருவரும் சேர்ந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளோம். எங்களுக்குள்ளான புரிதலினாலே இதனை செய்ய முடிந்தது.
சமீபத்தில் நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ரஹானே சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் எங்கள் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும்.
-
'Ajinkya and I are on the same page and I’m sure he'll do a tremendous job in my absence,' says #TeamIndia Skipper @imVkohli on the eve of the first Test against Australia.#AUSvIND pic.twitter.com/S8fmUABfUC
— BCCI (@BCCI) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'Ajinkya and I are on the same page and I’m sure he'll do a tremendous job in my absence,' says #TeamIndia Skipper @imVkohli on the eve of the first Test against Australia.#AUSvIND pic.twitter.com/S8fmUABfUC
— BCCI (@BCCI) December 16, 2020'Ajinkya and I are on the same page and I’m sure he'll do a tremendous job in my absence,' says #TeamIndia Skipper @imVkohli on the eve of the first Test against Australia.#AUSvIND pic.twitter.com/S8fmUABfUC
— BCCI (@BCCI) December 16, 2020
எனது பணியை ராஹானே செய்வார்:
இதனால் நான் அணியில் இல்லாத போது ரஹானே எனது பணியை சிறப்பாகச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது கேப்டன்ஷிப் குறித்து நம்பிக்கை எனக்குள்ளது. இதற்கு முன்னதும் அவர் அதனை சிறப்பாக செய்துள்ளார்.
அதனால், நான் இல்லாத சமயத்தில் அணியை எவ்வாறு வழிநடத்துவது, அணியின் வெற்றிக்கான திட்டங்களை வகுப்பது, கேப்டனாக தனது செயல்முறைகளை பின்பற்றுவது ஆகியவற்றை ரஹானே மேற்கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: ப்ரித்வி ஷா, சஹாவிற்கு இடம்!