இந்திய மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் வட பாவ் மிகவும் பிரபலமானது. வட பாவ்தான் எனக்கு பிடித்த ஸ்னாக்ஸ் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் பல்வேறு சமயங்களில் கூறியுள்ளார். தற்போது இந்த வட பாவ் இந்திய அணியின் மற்றொரு வீரருக்கு பிடித்த உணவாக மாறியுள்ளது.
அவர் யாரென்றால் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானேதான். வட பாவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, '' உங்களுக்கு எந்த வகை வட பாவ் பிடிக்கும்?
1. வட பாவ் உடன் டீ அருந்துவது 2. வடபாவ்-ஐ சட்னியுடன் உண்பது 3. வட பாவ் மட்டும்'' எனக் கேட்ட கேள்விக்கு, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் பதிலளித்தார்.
-
How do you like your vada pav? 😋
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. Vada pav with chai
2. Vada pav with chutney
3. Just Vada pav pic.twitter.com/nyOD5cdPrb
">How do you like your vada pav? 😋
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 10, 2020
1. Vada pav with chai
2. Vada pav with chutney
3. Just Vada pav pic.twitter.com/nyOD5cdPrbHow do you like your vada pav? 😋
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 10, 2020
1. Vada pav with chai
2. Vada pav with chutney
3. Just Vada pav pic.twitter.com/nyOD5cdPrb
அதில், '' எனக்கு வட பாவ் உடன் ரெட் சட்னி, சிறிது கிரீன் சட்னி, அதனோடு சேர்த்து கொஞ்சம் புளி சட்னி சேர்த்து உண்பது மிகவும் பிடிக்கும்'' என்றார்.
இந்த பதில் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஒருமுறை சச்சின் டெண்டுல்கருக்கு பிடிக்க உணவு குறித்து பேசுகையில், ஜிம்கானாவில் உள்ள சிவாஜி பார்க் அருகே இருக்கும் ஒரு உணவகத்தில் அதிக முறை வட பாவ் சாப்பிட்டுள்ளேன். அதன் ருசியை வேறு. எந்த ஸ்னாக்ஸாலும் ஈடுசெய்ய முடியாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனிப்பட்ட வாழ்வு சரியாக அமையவில்லை: நெய்மர்