19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது.
இதில் டர்பனில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சித்தேஷ் வீர் 71, திலக் வர்மா 59 ரன்கள் அடித்தனர். இதைத்தொடர்ந்து, 260 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையதாததால் 35.5 ஓவர்களில் 132 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், இந்திய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பெக்ஹம் வீலர் க்ரீன்வால் 50 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா, அதர்வா அன்கோலேக்கர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி, இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: சாதனைகளுடன் 2020ஆம் ஆண்டை தொடக்கிய ரன் மெஷின் கோலி!