ETV Bharat / sports

அபுதாபி டி10 லீக்: அறிமுகமாகும் புனே டெவில்ஸ்!

அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் முதல் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்குப் பதிலாக புனே டெவில்ஸ் என்ற புதிய அணி அறிமுகமாகவுள்ளதாக டி10 லீக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Pune Devils to debut in 2021 Abu Dhabi T10 league

author img

By

Published : Dec 18, 2020, 12:57 PM IST

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டின் டி20 தொடரை தொடர்ந்து, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்விதமாக டி10 லீக் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகம் நடத்திவருகிறது.

2017ஆம் ஆண்டு எட்டு அணிகளுடன் தொடங்கிய இத்தொடரின் நான்காவது சீசன் 2021ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 06ஆம் தேதிவரை, அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் நான்காவது சீசனிலிருந்து கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்கு பதிலாக புனே டெவில்ஸ் என்ற புதிய அணி அறிமுகமாகவுள்ளதாக டி10 லீக் கூட்டமைப்பு இன்று அறிவித்தது.

அதன்படி இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா, சமீபத்தில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் ஆகியோரையும் அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: மகனுடன் பயிற்சியை மேற்கொள்ளும் டைகர் உட்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.