இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான உள்ளூர் விளையாட்டு தொடராக கவுண்டி கிரிக்கெட் தொடர் கருதப்படுகிறது. இத்தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கவுண்டி தொடரின் அணிகளில் ஒன்றான யார்க்க்ஷயர் கிளப்பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜீம் ரபீக், கவுண்டி கிரிக்கெட் தொடரில் என்மீது பாய்ச்சப்பட்ட இனவெறி சர்ச்சைகள் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் இவரது கருத்துக்கும் முன்னாள் கவுண்டி வீரர்கள் பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
இந்நிலையில் யார்க்ஷயர் அணியின் உறுப்பினர் தாஜ் பட், யார்க்ஷயர் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் சட்டேஸ்வர் புஜாரா உள்பட பல வீரர்கள் இன்வெறி சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆசியாவைச் சேர்ந்தவர்களின் பெயர்களை இவர்களால் உச்சரிக்க முடியாததால், இங்குள்ளவர்கள் அவர்களை ‘ஸ்டீவ்’ என்றே அழைத்தனர். மேலும் வீரர்களை இவர்கள் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தே அழைத்தனர்.
கிளப்பில் இருந்த பல இளைஞர்கள் இதுகுறித்து கவுண்டி கிரிக்கெட் வாரியத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் இவர்களின் புகார்களை கவுண்டி கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
பிரபலமான கவுண்டி கிரிக்கெட் தொடரில் இனவெறி சர்ச்சைகள் இருந்தது குறித்து கிளப் அணி ஊழியர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்திருப்பது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நான்காவது முறையாக எம்.எம்.ஏ சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய ரிது போகத்!