ETV Bharat / sports

பிப்ரவரியில் தொடங்குகிறது பிஎஸ்எல் சீசன் 6! - பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது சீசன் பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி முடிவடையும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

PSL to start on February 20, final slated for March 22

author img

By

Published : Jan 9, 2021, 8:56 AM IST

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் ஆறாவது சீசனுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக செய்து வருகிறது.

அதன்படி பிஎஸ்எல் தொடரின் ஆறாவது சீசன் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி முதல் தொடங்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிபி வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்எல் தொடரின் ஆறாவது சிசன் 2021 பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி நிறைவடையும்.

ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் போட்டிகள் அனைத்து லாகூர், கராச்சி மைதானங்களில் நடத்தப்படும். இத்தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 22ஆம் தேதி லாகூரில் நடத்தப்படும்.

பிசிஆர் கரோனா சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே, இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர். அதேசமயம் தொற்று உறுதிசெய்யப்படும் வீரர்கள், அவர்களுடன் இருக்கும் அணி ஊழியர்கள், பத்து நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அதில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: கோலாகோவின் அடுத்தடுத்த கோல்களால் ஹைதராபாத் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.