உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இன்று (பிப்.25) நடைபெற்ற 3ஆம் சுற்று போட்டியில் மும்பை அணி - புதுச்சேரி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் புதுச்சேரி அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செயதது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பிரித்வி ஷா - ஆதித்யா டாரே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை உயர்த்தியது. இதில் அரைசதம் கடந்த டாரே 56 ரன்களில் ஆட்டமிழக்க, பிரித்வி ஷாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா சதமடித்து அசத்தியதோடு நில்லாமல், தனது ருத்ரதாண்டவத்தை வெளிக்காட்டத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாவை எப்படி வீழ்த்துவது எனத் தெரியாமல் பந்துவீச்சாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த பிரித்விஷா விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் மும்பை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்களை குவித்தது. அந்த அணியில் பிரித்வி ஷா 31 பவுண்டரி, 05 சிக்சர்களை விளாசி 227 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
C for Double Century 💙
— Delhi Capitals (@DelhiCapitals) February 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Leading the Mumbai side, @PrithviShaw has just hit 200 vs Puducherry in the #VijayHazareTrophy 🔥
Reply using an emoji to describe his knock ⬇️#CAPvMUM pic.twitter.com/I1805UIrF1
">C for Double Century 💙
— Delhi Capitals (@DelhiCapitals) February 25, 2021
Leading the Mumbai side, @PrithviShaw has just hit 200 vs Puducherry in the #VijayHazareTrophy 🔥
Reply using an emoji to describe his knock ⬇️#CAPvMUM pic.twitter.com/I1805UIrF1C for Double Century 💙
— Delhi Capitals (@DelhiCapitals) February 25, 2021
Leading the Mumbai side, @PrithviShaw has just hit 200 vs Puducherry in the #VijayHazareTrophy 🔥
Reply using an emoji to describe his knock ⬇️#CAPvMUM pic.twitter.com/I1805UIrF1
இதனையடுத்து இமாயலய இலக்கை துரத்திய புதுச்சேரி அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 38.1 ஓவரிலேயே புதுச்சேரி அணி அனைத்டு விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களை மட்டும் எடுத்தது. மும்பை அணி தரப்பில் பிரஷாந்த் சொலங்கி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் மும்பை அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றது.
இதையும் படிங்க:ஹிட்மேன் சாதனையை முறியடித்த கப்தில்!