ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் எட்வர்ட்ஸ் ஒரு ரன்னோடு வெளியேற, பின்னர் வந்த வின்ஸும் 17 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோஷ் பிலிப்ஸ் - கேப்டன் ஹயூக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 32 ரன்களில ஹயூக்ஸ் ஆட்டமிழந்து வெளியேற, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிலிப்ஸும் 95 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஷான் மார்ஷ் 13 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்தனர்.
அதிலும் சிக்சர்ஸ் அணியின் துவார்ஷுயிஸ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, சிக்சர்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் 10.4 ஓவர்கள் முடிவிலேயே ரெனிகேட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்களை மட்டுமே எடுத்தது.
-
🙌 The BIGGEST winning margin in @BBL history! 👊#smashemsixers #BBL10 pic.twitter.com/Tu2tgT1IBt
— Sydney Sixers (@SixersBBL) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🙌 The BIGGEST winning margin in @BBL history! 👊#smashemsixers #BBL10 pic.twitter.com/Tu2tgT1IBt
— Sydney Sixers (@SixersBBL) December 13, 2020🙌 The BIGGEST winning margin in @BBL history! 👊#smashemsixers #BBL10 pic.twitter.com/Tu2tgT1IBt
— Sydney Sixers (@SixersBBL) December 13, 2020
இதன் மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க:பிபிஎல்: ஷார்ட்டின் அதிரடியில் அடிலெய்டை வீழ்த்தியது ஹாபர்ட்!