ETV Bharat / sports

உலகக்கோப்பை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் - தென் ஆப்பிரிக்காவில் நாடைபெறவிருக்கும் அண்டர் 19 உலகக்கோப்பை

தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறவிருக்கும் அண்டர் 19 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா விடுவிக்கப்பட்டுள்ளார்.

PCB withdraws teenage sensation Naseem Shah

author img

By

Published : Jan 2, 2020, 7:52 AM IST

பாகிஸ்தான் அணியில் சீமிப காலமாக அதிகம் பேசப்படக்கூடிய நபராக இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா. இவர் கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இளம் வயதில் ஐந்துவிக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நபர் என்ற சாதனையையும் படைத்து அசத்தினார்.

இந்நிலையில், ஷா தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் அண்டர் 19 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால் இவர் ஏற்கனவே சீனியர் அணியுடன் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய காரணத்தால் இவரை அத்தொடருக்கு அனுப்ப வேண்டமென அந்த அணியின் சீனியர் வீரர் முகமது ஹபீஸ், பிசிபி-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஷ்பா உல் ஹக், பந்துவீச்சு பயிற்சியாளர் வஃக்கர் யூனிஸ் ஆகியோர், நசீம் ஷாவை உலகக்கோப்பைத் தொடருக்கு அனுப்ப வேண்டாமென முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தலைமை செயல் அலுவலர் வாசிம் கான் கூறுகையில், நசீம் ஷா, தனது சர்வதேச கிரிக்கெட்டை சிறப்பாக தொடங்கியுள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதால் அந்த வாய்ப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மற்றொரு வீரரைக் கண்டரிய உதவும் என்றும் இந்த மாற்றத்தினால் பாகிஸ்தான் அண்டர் 19 அணிக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:”அவரை விளையாட அனுப்பாதீர்கள்” - முகமது ஹபீஸ் கோரிக்கை!

Intro:Body:

PCB withdraws teenage sensation Naseem Shah from U-19 World Cup squad

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.