ETV Bharat / sports

சிட்னி டெஸ்ட்: சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட பந்த் - ஆட்டத்தில் நீடிக்கும் பரபரப்பு - ரிஷப் பந்த்

சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 280 ரன்களை எடுத்துள்ளது.

Pant youngest wicket-keeper to score 50 plus runs in 4th innings in Australia

author img

By

Published : Jan 11, 2021, 10:06 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 309 ரன்கள் என்று வெற்றி இலக்கை நோக்கி களமிறக்கிய கேப்டன் ரஹானே, இன்றைய ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - புஜாரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ரிஷப் பந்த் அரைசதமடித்தார்.

  • ☝️ WICKET!

    Rishabh Pant falls only three short of what would've been a brilliant century, with Nathan Lyon finally getting his man!

    How huge a moment is this? 🧐 pic.twitter.com/TznjzLzFbd

    — ICC (@ICC) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும் சர்வதேச டெஸ்டில் 26ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ரிஷப் பந்த் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கோட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.

  • Cheteshwar Pujara has become the 11th Indian batsman to reach 6000 runs in Test cricket!

    What a fine player he has been 🔥

    He is also closing in on a fifty in the #AUSvIND Test. pic.twitter.com/MMApa5sIs9

அதன்பின் நிதான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிவந்த புஜாரா சர்வதேச டெஸ்டில் ஆறாயிரம் ரன்களைக் கடந்தும் சாதித்தார். பின்னர் 77 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இப்போட்டியில் வெற்றிபெறுவது யார் என்பது கேள்விக்குறியானது.

பின்னர் ஜோடி சேர்ந்த அஸ்வின் - விஹாரி இணை நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தவிர்த்துவருகின்றனர். இதனால் ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 280 ரன்களை எடுத்துள்ளது. மேலும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 127 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இனவெறிப் பாகுபாடு காண்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' - ஜெய் ஷா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.