ETV Bharat / sports

ஆடிய ஆட்டம் என்ன..? கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்! - அனுபவ ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமதை நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Sarfaraz Ahmed
author img

By

Published : Oct 18, 2019, 9:55 AM IST

நடந்து முடிந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்குகான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றியையும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியையும் சந்தித்தது.

அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி குறித்தான விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளரான மிஷ்பா உல் ஹக் அந்த அணியின் கேப்டனான சர்பராஸ் அகமதின் செயல்பாடுகளில் குறையிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக தொடக்க ஆட்டகாரர் அசார் அலி நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் அந்த பாகிஸ்தான் அணியின் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் பெயரையும் பரிந்துரைத்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் இந்த மாற்றமானது வருகிற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து தொடரப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தரும், சர்பராஸ் அகமதுவின் கேப்டன்சி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனிக்கு அடுத்து இவரு மட்டும் தான்! - பட்டியலில் இணைந்த சர்ஃபராஸ்

Intro:Body:

Azhar Ali likely to replace Sarfaraz Ahmed as Pakistan's Test skipper

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.