பத்தாண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது அந்நாட்டின் ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் கருனரத்னே, ஃபெர்னாண்டோ சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதன்பின் அந்த அணி 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை எடுத்திருந்தது.
-
After nearly a three-day wait, Dhananjaya de Silva finally gets his sixth Test ton! What an innings it has been 👏 #PakvSL pic.twitter.com/RQbrGWQJr5
— ICC (@ICC) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After nearly a three-day wait, Dhananjaya de Silva finally gets his sixth Test ton! What an innings it has been 👏 #PakvSL pic.twitter.com/RQbrGWQJr5
— ICC (@ICC) December 15, 2019After nearly a three-day wait, Dhananjaya de Silva finally gets his sixth Test ton! What an innings it has been 👏 #PakvSL pic.twitter.com/RQbrGWQJr5
— ICC (@ICC) December 15, 2019
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் 18 ஓவர்கள் மட்டும் வீசியிருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது. பின் நேற்று முந்தினம் தொடங்கிய ஆட்டத்தில் ஆறு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஈரப்பதம், வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது.
பின் நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இலங்கை அணி, தனஞ்செய டி சில்வா அடித்த சதத்துடன் 308 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இலங்கை அணி சார்பில் தனஞ்செய 102 ரன்களை விளாசியிருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
-
💯 on debut for Abid Ali! 👏 🎉
— ICC (@ICC) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Babar Azam has meanwhile moved into the 70s.#PAKvSL | FOLLOW 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/MkJIYMCzN2
">💯 on debut for Abid Ali! 👏 🎉
— ICC (@ICC) December 15, 2019
Babar Azam has meanwhile moved into the 70s.#PAKvSL | FOLLOW 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/MkJIYMCzN2💯 on debut for Abid Ali! 👏 🎉
— ICC (@ICC) December 15, 2019
Babar Azam has meanwhile moved into the 70s.#PAKvSL | FOLLOW 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/MkJIYMCzN2
அதனைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர் ஷான் மசூத் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினர். அதன்பின் சிறப்பாக விளையாடிவந்த அபித் அலி, அரைசதமடித்து அசத்தினார். இதனால் நானகாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்திருந்தது.
-
A third Test 💯 for Babar Azam! 👏 #PAKvSL | FOLLOW 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/jin3VId1r7
— ICC (@ICC) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A third Test 💯 for Babar Azam! 👏 #PAKvSL | FOLLOW 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/jin3VId1r7
— ICC (@ICC) December 15, 2019A third Test 💯 for Babar Azam! 👏 #PAKvSL | FOLLOW 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/jin3VId1r7
— ICC (@ICC) December 15, 2019
இதனையடுத்து இன்று தொடங்கிய இறுதி நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அபித் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை அடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சதமடித்து அசத்த, ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
-
Match drawn in Rawalpindi.
— ICC (@ICC) December 15, 2019 \" class="align-text-top noRightClick twitterSection" data="
Hundreds for Abid Ali and Babar Azam ensured no drama for the hosts 💯 #PAKvSL | SCORECARD 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/ViZ2JRphGs
\">Match drawn in Rawalpindi.
— ICC (@ICC) December 15, 2019
Hundreds for Abid Ali and Babar Azam ensured no drama for the hosts 💯 #PAKvSL | SCORECARD 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/ViZ2JRphGs
\Match drawn in Rawalpindi.
— ICC (@ICC) December 15, 2019
Hundreds for Abid Ali and Babar Azam ensured no drama for the hosts 💯 #PAKvSL | SCORECARD 👇 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/ViZ2JRphGs
இதனால் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் சிறப்பாக விளையாடி சதமடித்த பாகிஸ்தானின் அபித் அலி ஆட்டநாயகனாத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:இந்த லிட்டில் சச்சினை யூஸ் பன்னிங்கோங்க கோலி - கெவின் பீட்டர்சன் பகிர்ந்த வீடியோ