பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.11) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் பாபர் அசாம் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய முகமது ரிஸ்வான் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். பின்னர் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சர்வதேச டி20 அரங்கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
-
Maiden T20I century for @iMRizwanPak 👏
— ICC (@ICC) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
What an innings! #PAKvSA | https://t.co/1lTEzd8gPu pic.twitter.com/c7o6NK1MKq
">Maiden T20I century for @iMRizwanPak 👏
— ICC (@ICC) February 11, 2021
What an innings! #PAKvSA | https://t.co/1lTEzd8gPu pic.twitter.com/c7o6NK1MKqMaiden T20I century for @iMRizwanPak 👏
— ICC (@ICC) February 11, 2021
What an innings! #PAKvSA | https://t.co/1lTEzd8gPu pic.twitter.com/c7o6NK1MKq
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 104 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மாலன் - ஹெண்ட்ரிக்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்து அடித்தளமிட்டது. இதனால் ஆறு ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்களையும் எடுத்தது.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மாலன் 44 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் ஹெண்ட்ரிக்ஸும் பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழலில் தென் ஆப்பிரிக்க அணி தள்ளப்பட்டது. ஆனால் அந்த ஓவரை எதிர்கொண்ட பிரிட்டோரியஸ் - ஃபோர்ச்சுயின் இணை அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
-
Pakistan have done it!@TheRealPCB win the 1st T20I by three runs
— ICC (@ICC) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🌟 Mohammad Rizwan 104*
🌟 Usman Qadir 2/21#PAKvSA | https://t.co/28GsN17gmk pic.twitter.com/rM3chq7E8d
">Pakistan have done it!@TheRealPCB win the 1st T20I by three runs
— ICC (@ICC) February 11, 2021
🌟 Mohammad Rizwan 104*
🌟 Usman Qadir 2/21#PAKvSA | https://t.co/28GsN17gmk pic.twitter.com/rM3chq7E8dPakistan have done it!@TheRealPCB win the 1st T20I by three runs
— ICC (@ICC) February 11, 2021
🌟 Mohammad Rizwan 104*
🌟 Usman Qadir 2/21#PAKvSA | https://t.co/28GsN17gmk pic.twitter.com/rM3chq7E8d
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: டி20 தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!