ETV Bharat / sports

நசீம் ஷா ஹாட்ரிக்... வங்கதேசத்தை பந்தாடிய பாகிஸ்தான்! - நசீம் ஷா ஹாட்ரிக்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Pakistan thrash Bangladesh in Rawalpindi Test

author img

By

Published : Feb 10, 2020, 11:43 PM IST

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராவில்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 233 ரன்களும், பாகிஸ்தான் அணி 445 ரன்களும் எடுத்தன. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 143, ஷான் மசூத் 100 ரன்கள் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய மூன்றாம் ஆட்டநேர முடிவில் 45 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியின் விழும்பில் இருந்தது. இந்நிலையில், நான்காம் ஆட்டநாள் இன்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வங்கதேச அணி 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் 41, நஜ்முல் ஹொசைன் 38, தமிம் இக்பால் 34 ரன்கள் அடித்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  • Naseem turned the match on its head as he accounted for the wickets of Najmul Hossain Shanto (38), Taijul Islam (0) and Mahmudullah (0) after he was recalled into the attack by Pakistan captain Azhar Ali in the final minutes of the evening session.#PAKvBAN https://t.co/OVtGEsQIcl pic.twitter.com/ubE0MLUvQx

    — Pakistan Cricket (@TheRealPCB) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஹாட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆட்டநாயகன் விருதை வென்றார். இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் தனது 16ஆவது வயதில் படைத்தார்.

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 5ஆம் தேதி கராச்சியில் நடைபெறவுள்ளது. இதனிடையே ஏப்ரல் 3ஆம் தேதி பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியும் கராச்சியில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!

Intro:Body:

Pakistan thrash Bangladesh in Rawalpindi Test

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.