கடந்த மாதம் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான மிஸ்பா உல் ஹக் தனது அணியைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர், 'பாகிஸ்தான் அணி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறது. அதற்கு காரணம் பேட்ஸ்மேன் பாபர் ஆசம், வேகப்பந்துவீச்சாளர்கள் நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர்தான். இதில் பாபர் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளங்குபவர். மேலும் அவர் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் சதமடித்ததன் மூலம் சிறந்த டெஸ்ட் வீரராகவும் வலம்வருகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 'ஷஹீன், நசீம் ஆகியோர் இளம் வீரகளாக இருப்பினும், அவர்களது செயல்பாடுகள் அனுபவ வீரர்களை உள்ளடக்கியுள்ளது. அவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நான் கருதுகிறேன். இவர்கள் இதே பார்முடன் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கினால் பாகிஸ்தான் அணிக்கு அது பெரும் பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை' எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அனுபவ வீரர் ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோரை மீண்டும் பாகிஸ்தான் டி20 அணியில் விளையாட வைப்பேன் என்றார்.
இதையும் படிங்க: தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி - பதக்கங்களை அள்ளிய தமிழ்நாடு!