பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் உமர் குல். பாகிஸ்தானின் உள்ளூர் டி20 போட்டியான நேஷனல் டி20 கோப்பை தொடரில் சதர்ன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த உமர்குல், நேற்று (அக்.16) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக 2003ஆம் ஆண்டு அறிமுகமான உமர் குல், இதுவரை 47 டெஸ்ட், 137 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் விளையாடி 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
-
All good things in life must come to an end! ♥️ #ThankyouUmarGul @mdk_gul pic.twitter.com/MLM57UOIpm
— Pakistan Cricket (@TheRealPCB) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All good things in life must come to an end! ♥️ #ThankyouUmarGul @mdk_gul pic.twitter.com/MLM57UOIpm
— Pakistan Cricket (@TheRealPCB) October 16, 2020All good things in life must come to an end! ♥️ #ThankyouUmarGul @mdk_gul pic.twitter.com/MLM57UOIpm
— Pakistan Cricket (@TheRealPCB) October 16, 2020
2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் எம்.எஸ். தோனி தலைமையில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றபோது, அந்தத் தொடரில் உமர் குல் 13 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் மும்பையின் ஆதிக்கம்... 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!