இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் அதிகம் பேசப்பட்ட பெயர் முகமது சிராஜ். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, சிராஜின் தந்தை இறந்த தருணத்திலும் கூட இறுதிச் சடங்கில் பங்கேற்காமல், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்தது தான்.
மேலும் சிட்னி, பிரிஸ்பேன் மைதானங்களில் ரசிகர்கள் இனரீதியாக சிராஜை விமர்சித்ததும் மற்றொரு காரணமாக அமைந்தது. எதுவாயினும் தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிராஜ், நாடு திரும்பிய பின்னும் அவரது மீதான கவனத்தை தக்கவைத்துள்ளார்.
நேற்று முன்தினம் (ஜன.21) நாடு திரும்பிய முகமது சிராஜ், நேரடியாக தனது தந்தையின் கல்லறைக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது.
தற்போது சிராஜின் மற்றொரு சமூகவலைதள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. அது முகமது சிராஜ், நாட்டிற்கு திரும்பியவுடன் பி.எம்.டபிள்யூ ரக சொகுசு காரை வாங்கி அனைவரையும் வியக்கவைத்துள்ளார். முகமது சிராஜின் புதிய சொகுசு கார் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: 'டிராவிட் இளம் வீரர்களை மனரீதியாக வலிமையாக்கியுள்ளார்' - இன்சமாம் உல் ஹக்