ETV Bharat / sports

’இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்’ - வீரர்களுக்கு விண்டீஸ் துணைப் பயிற்சியாளர் அறிவுரை!

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர்கள், இந்தியாவின் கேப்டன் விராட் கோலியைப் பார்த்துக் கற்றுகொள்ளுங்கள் என அந்த அணியின் துணைப் பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Dec 13, 2019, 9:47 PM IST

West Indies assistant coach
West Indies assistant coach

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகின்றது. இதில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது.

இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணைப் பயிற்சியாளரான ரோடி எஸ்ட்விக், அந்த அணியின் இளம் வீரர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், ”விண்டீஸ் அணியின் இளம் வீரர்களான பூரான், ஹெட்மையர், ஹோப் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் இந்த விளையாட்டில் மேன்மையடைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.

மேலும், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 15ஆம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியீடு!

Intro:Body:

ss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.