சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா (கோவிட் -19) வைரஸ் தொற்றால் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் சுத்தமாக இருக்குமாறு அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீர்ர ரோஹித் சர்மா, கோவிட்-19 வைரஸ் பரவால் இருக்க நாம் புத்திசாலிதனமாகச் செயல்பட வேண்டும் என ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
-
Stay safe everyone. pic.twitter.com/2ABy1XUeTP
— Rohit Sharma (@ImRo45) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stay safe everyone. pic.twitter.com/2ABy1XUeTP
— Rohit Sharma (@ImRo45) March 16, 2020Stay safe everyone. pic.twitter.com/2ABy1XUeTP
— Rohit Sharma (@ImRo45) March 16, 2020
அந்த வீடியோவில், ”கோவிட்-19 வைரஸால் உலகம் ஸ்தம்பித்து போய் இருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. நாம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு தெரியப்படுத்துங்கள். இந்த இக்கட்டான தருணத்திலும் அயராது உழைக்கும் மருத்துவர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறேன். அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் இருப்போம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வீரர்களின் பாதுகாப்பை விட அவர்களுக்கு பணமே முக்கியம்' - சாய்னா நேவால்