நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.
இதனிடையே, இவ்விரு அணிகளுக்கிடையே கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் நான்காவது நடுவராக நியூசிலாந்தின் கார்த் ஸ்டிராட் என்பவர் பணியாற்றினார்.
இவர், வயது வந்தவர்களுக்கான(அடல்ட்) படங்களில் நடித்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இவர் தொழில்முறை கோல்ஃப் சங்கத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இவர் அடல்ட் படங்களில் நடித்தது தெரியவந்ததால், கோல்ஃப் சங்கத்தின் தலைமை நிர்வாகிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் நடுவராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார் கார்த் ஸ்டிராட். இவர், சர்வதேச மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டிகளிலும் நடுவராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க:ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்க ஒப்புதல்...!