டி20 கிரிக்கெட்டின் வருகையாலும், பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக ஐசிசி வரையறுக்கும் விதிமுறையினாலும் தற்போது ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதாக மாறிவிட்டது. ஆனால், இந்த நிலை 1990களிலும், 2000ஆம் ஆண்டுகளிலும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அத்தகைய வாய்ப்பு சையத் அன்வர், ஜெயசூர்யா, சார்லஸ் காவின்ட்ரி, ஏன் சச்சின் உட்பட வெகு சிலரது கைக்குச் சென்று நழுவியது.
அதில், அன்வர் 1999இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் அடித்ததே ஒருநாள் போட்டிகளில் நீண்ட ஆண்டுகளாக தனி ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதன்பின் 2010 பிப்ரவரி 24இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் இந்த சாதனையை முறியடிப்பார் என யாரும் முதலில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சச்சின் சதம் விளாசினார்.
அப்போட்டியில் சச்சினின் பேட்டிங்கை பார்த்தால், 1998இல் அவரது விண்டேஜ் ஆட்டம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அதிரடியாக விளையாடினார் சச்சின். இதனால், சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழத்தொடங்கியது. வழக்கம் போல கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை தோளில் சுமந்து விளையாடிய அவர், சையத் அன்வரின் 194 ரன் சாதனையை முதலில் முறியடித்தார்.
அதன்பின் தென் ஆப்பிரிக்க வீரர் சார்ல் லங்கடவேல்ட் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் பாயிண்ட் திசையில் சிங்கிள் எடுத்து ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அப்போது "The first man in the planet to reach 200 and its a superman from India" என அந்த தருணத்துக்கு ரவி சாஸ்திரி தனது கம்பீர குரலில் அழகு சேர்த்தார்.
-
#OnThisDay in 2010, @sachin_rt created history by becoming the 1st batsman to score a 200 in ODIs. 🇮🇳👏
— BCCI (@BCCI) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Relive the knock 👉 https://t.co/yFPy4Q1lQB pic.twitter.com/F1DtPmo2Gm
">#OnThisDay in 2010, @sachin_rt created history by becoming the 1st batsman to score a 200 in ODIs. 🇮🇳👏
— BCCI (@BCCI) February 24, 2020
Relive the knock 👉 https://t.co/yFPy4Q1lQB pic.twitter.com/F1DtPmo2Gm#OnThisDay in 2010, @sachin_rt created history by becoming the 1st batsman to score a 200 in ODIs. 🇮🇳👏
— BCCI (@BCCI) February 24, 2020
Relive the knock 👉 https://t.co/yFPy4Q1lQB pic.twitter.com/F1DtPmo2Gm
147 பந்துகளில் 25 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 200 ரன்களுடன் அவர் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிக்கலாம் என்பதற்கு மற்ற வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் சச்சின். இச்சாதனை குறித்து சச்சின் கூறுகையில், எனது சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிப்பார் என்றார்.
அவர் கூறியதை போல சச்சினின் இந்த சாதனையை சேவாக் 2011இல் முறியடித்தார். அதன்பின் கெயில், மார்டின் கப்தில் என இறுதியாக இந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். பொதுவாக, எந்த ஒரு துறையாக இருந்தாலும் முதலில் சாதனை படைக்கும் நபர்களைதான் பெரும்பாலான ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதுபோலதான் சச்சினின் இந்த இன்னிங்ஸும்.
இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'