ETV Bharat / sports

ஸ்டார்க்கால் வலுவிழந்த நியூசிலாந்து; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா! - ராஸ் டெய்லர்

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது.

Aus vs NZ
ஆஸ்திரேலியா
author img

By

Published : Dec 14, 2019, 3:49 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி. அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று களத்தில் சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லருடன் இணைந்து வாட்லிங் பேட்டிங்கைத் தொடங்கினார். இந்த ஜோடி இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் என நினைத்த நிலையில், வாட்லிங் 8 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

இதன்பின் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் லயன் பந்தில் 80 ரன்களுக்கு ஆட்டமிந்து ஏமாற்றினார். பின்னர் வந்த வீரர்களில் கிராண்ஹோம் மட்டும் அதிரடியாக ஆடி 23 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து வந்த சாண்ட்னர் 2, சவுதி 8 ரன்கள் எடுத்து வெளியேறினர். இறுதியாக நியூசிலாந்து அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 250 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் - ஜொ பெர்ன்ஸ் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மிகவும் நிதானமாக எதிர்கொண்டனர்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில், வார்னர் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து லபுஸ்சக்னே - பெர்ன்ஸ் இணை விளையாடிவருகிறது.

இன்னும் இரண்டரை நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி மிகப்பெரும் ஸ்கோரை இலக்காக நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என்னைவிட வில்லியம்சன்தான் சரியானவர் - பென் ஸ்டோக்ஸ்!

Intro:Body:

Aus vs NZ - 1st test Day 2

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.