2019ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. இதில், லீக் சுற்றில் தோல்வி அடையாத அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ், தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூவின் அதிரடியால் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 170 ரன்கள் இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெகதீசன் நல்ல தொடக்கத்தை தந்தார். 24 பந்துகளில் நான்கு பவுண்ட்ரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில், முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் தங்களது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தனர். குறிப்பாக, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அஸ்வின் 22 ரன்களில் பெவிலினுக்குத் திரும்பினார்.
இதையடுத்து, அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தரப்பில் ஹரிஷ் குமார் கடைசி ஓவரை வீச வந்தார். தனது அபாரமான பந்துவீச்சின்மூலம் முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே வழங்கினார். இதனால், கடைசி மூன்று பந்துகளில் மூன்று சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு திண்டுக்கல் அணி தள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஹரிஷ் குமார் வீசிய நான்காவது பந்தை, முகமது வீணடித்ததால் சேப்பாக் அணியின் வெற்றி உறுதியானது. பின்னர், கடைசி இரண்டு பந்துகளை முகமது இரண்டு சிக்சர்கள் விளாசி அணிக்கு ஆறுதல் தந்தார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது.
-
🎟️ to Chennai delivered!
— TNPL (@TNPremierLeague) August 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 2017 champs @supergillies beat the @DindigulDragons by 5 runs and qualify for the #TNPL2019 finals! #NammaPasangaNammaGethu pic.twitter.com/6R17zh7TEn
">🎟️ to Chennai delivered!
— TNPL (@TNPremierLeague) August 11, 2019
The 2017 champs @supergillies beat the @DindigulDragons by 5 runs and qualify for the #TNPL2019 finals! #NammaPasangaNammaGethu pic.twitter.com/6R17zh7TEn🎟️ to Chennai delivered!
— TNPL (@TNPremierLeague) August 11, 2019
The 2017 champs @supergillies beat the @DindigulDragons by 5 runs and qualify for the #TNPL2019 finals! #NammaPasangaNammaGethu pic.twitter.com/6R17zh7TEn
இதனால், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை சேப்பாக் வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ வென்றார்.
இப்போட்டியில் திண்டுக்கல் அணி தோல்வியடைந்தாலும், காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தேர்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இரண்டாவது தகுதிச் சுற்றில் மோதும். அதில், வெற்றிபெறும் பட்சத்தில் திண்டுக்கல் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.