இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத்தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இத்தொடரின் முதலாவது டி20 போட்டி இன்று சூரத்தில் நடைபெறுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்க ஆடவரணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என சமன் செய்த நிலையில் மகளிர் அணி கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்குகிறது. லிசெல் லீ தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடனே முதல் போட்டியில் களமிறங்கும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனா!