இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி, 58 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை எடுத்தபோது மழைக்குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தனது ஆறாவது சதத்தை அடித்தார். அவர் சதம் அடிப்பதற்கு முன் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்யத் தொடங்கியது. மழை பெய்தால் தான் சதம் அடிக்கும் வாய்ப்பு தள்ளிப்போகுமே என்ற நினைப்பிலிருந்து ரோகித் சர்மா, இப்போது மழை பெய்ய வேண்டாம் என தொடர்ந்து கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
Rohit Sharma the ball before his ton. Shouting 'Not now' as the rain begun to fall. Next ball - Six to bring up his 100 pic.twitter.com/firwEnZIPy
— Gav Joshi (@Gampa_cricket) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rohit Sharma the ball before his ton. Shouting 'Not now' as the rain begun to fall. Next ball - Six to bring up his 100 pic.twitter.com/firwEnZIPy
— Gav Joshi (@Gampa_cricket) October 19, 2019Rohit Sharma the ball before his ton. Shouting 'Not now' as the rain begun to fall. Next ball - Six to bring up his 100 pic.twitter.com/firwEnZIPy
— Gav Joshi (@Gampa_cricket) October 19, 2019
இதையும் படிங்க: ஒரே போட்டியில் இரண்டு சாதனைப் படைத்த ஹிட்மேன்
அதன் பிறகு, மழை குறுக்கிடுவதற்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பெய்டேட் வீசிய 45ஆவது ஓவரில் ரோகித் சர்மா சிக்சர் அடித்து தனது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம், ஒரே டெஸ்ட் தொடரில் மூன்று சதங்களை அடித்த இந்திய அணியின் இரண்டாவது தொடக்க வீரர் என்ற சாதனைப் படைத்தார்.
முதல் நாள் முடிவில் இவர் 117 ரன்களுடனும் ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்றைய நாள் விரைவில் முடிக்கப்பட்டதால், நாளைய ஆட்டம் அரை மணிநேரத்திற்கு முன்னதாகவே 9 மணிக்கு தொடங்கவுள்ளது.