சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேட்டிங், பவுலிங் , ஆல் ரவுண்டர்களுக்கான வீரர்களின் தரவரிசை வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முஜிப் உர் ரஹ்மான் 29 இடங்கள் முன்னேறி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளார். நடந்துமுடிந்த வங்கதேச முத்தரப்பு தொடரில் சிறப்பாக பந்து வீசியதின் மூலம் இவர் டாப்-10 வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
-
Another Afghanistan spinner makes it to the top 10!@Mujeeb_R88 has jumped 29 places to No.9 in the latest @MRFWorldwide ICC Men's T20I Ranking for bowlers. pic.twitter.com/upJdPbEuej
— ICC (@ICC) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Another Afghanistan spinner makes it to the top 10!@Mujeeb_R88 has jumped 29 places to No.9 in the latest @MRFWorldwide ICC Men's T20I Ranking for bowlers. pic.twitter.com/upJdPbEuej
— ICC (@ICC) September 25, 2019Another Afghanistan spinner makes it to the top 10!@Mujeeb_R88 has jumped 29 places to No.9 in the latest @MRFWorldwide ICC Men's T20I Ranking for bowlers. pic.twitter.com/upJdPbEuej
— ICC (@ICC) September 25, 2019
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித்கான் ஐசிசியின் டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த தரவரிசைப் பட்டியலில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் கூட டாப்-10 வரிசையில் இடம்பிடிக்கவில்லை.
-
Richie Berrington ↗️
— ICC (@ICC) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kevin O'Brien ↗️
The 🏴 and ☘️ all-rounders sizzle in the latest @MRFWorldwide ICC Men's T20I Rankings! pic.twitter.com/re5JtwnX0S
">Richie Berrington ↗️
— ICC (@ICC) September 25, 2019
Kevin O'Brien ↗️
The 🏴 and ☘️ all-rounders sizzle in the latest @MRFWorldwide ICC Men's T20I Rankings! pic.twitter.com/re5JtwnX0SRichie Berrington ↗️
— ICC (@ICC) September 25, 2019
Kevin O'Brien ↗️
The 🏴 and ☘️ all-rounders sizzle in the latest @MRFWorldwide ICC Men's T20I Rankings! pic.twitter.com/re5JtwnX0S
அதேபோல் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் தொடர்ந்து முதலிடத்திலும் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்திலும் ஆப்கானிஸ்தானின் முகமது நபி மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஆச்சரியபடும் வகையில் ஸ்காட்லாந்தின் ரிச்சி பெரிங்டன் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதிலும் ஒரு இந்திய ஆல் ரவுண்டர்கள் கூட டாப்-10 வரிசையில் இடம்பெறவில்லை.
பேட்டிங்குக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதலிடத்திலும் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் இரண்டாமிடத்திலும் நியூசிலாந்தின் காலின் முன்ரோ மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா ஒன்பதாவது இடத்திற்கும் கே.எல். ராகுல் பத்தாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிஙக: #BangladeshTriSeries2019: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் - பகிர்ந்தளிக்கப்பட்ட கோப்பை!