ETV Bharat / sports

'இது சாதாரண தொடராக இருக்காது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து ஹோல்டர் ஓபன் டாக்!

author img

By

Published : Jun 11, 2020, 4:53 PM IST

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, சாதாரண டெஸ்ட் தொடராக இருக்கப் போவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

not-going-to-be-normal-bilateral-series-jason-holder-on-tests-against-england

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் இவற்றின் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் எந்த வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒரு சில நாடுகள் பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதால், அடுத்த மாதம் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவது உறுதியாகிவுள்ளது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் நிச்சயம் சாதாரணமான தொடராக இருக்காது. மாறாக இது கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என நான் நினைக்கிறேன். இதன் காரணமாக எனது அணி வீரர்களிடம் பலமுறை ஆலோசனையில் ஈடுபட்டு, வெற்றிபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

கடந்த முறை இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். தற்போதும் அதே உத்வேகத்துடன் நாங்கள் செயல்படுவோம் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை எட்டாம் தேதி சவுத்ஹம்டனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 24ஆம் தேதியும் ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.