கிரிக்கெட் வரலாற்றின் அடுத்த பரிமானமான டி10 லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய சீசனின் முதல் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான மராத்தா அரபியன்ஸ் அணி டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அரபியன்ஸ் அணி தொடக்கத்தில் ஆடம் லித், கிறிஸ் லின் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்கும் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் துசன் ஷனக்க, வால்டனின் அதிரடியால் அரபியன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் கிறிஸ் வூட், ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின் ஜார்ஜ் முன்சியுடன் ஜோடி சேர்ந்த ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸ்சல் 21 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். இதன் மூலம் நார்த்தன் வாரியர்ஸ் அணி 7 ஓவர்களில் 91 ரன்களை எடுத்தது.
-
Power of Russell! Andre Russell is the Man of The Match of the opening match of 'Aldar Properties Abu Dhabi T10' #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #NortherWarriors #MarathaArabians pic.twitter.com/q2HYu8dOJo
— T10 League (@T10League) November 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Power of Russell! Andre Russell is the Man of The Match of the opening match of 'Aldar Properties Abu Dhabi T10' #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #NortherWarriors #MarathaArabians pic.twitter.com/q2HYu8dOJo
— T10 League (@T10League) November 15, 2019Power of Russell! Andre Russell is the Man of The Match of the opening match of 'Aldar Properties Abu Dhabi T10' #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #NortherWarriors #MarathaArabians pic.twitter.com/q2HYu8dOJo
— T10 League (@T10League) November 15, 2019
இதன் மூலம் நார்த்தன் வாரியர்ஸ் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மராத்தா அரபியன்ஸ் அணியை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரே ரஸ்சல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.