ETV Bharat / sports

ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு தேதி முடிவு செய்யவில்லை: பிசிசிஐ

ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் இந்த வாரம் நடக்கவிருந்த நிலையில், எந்தத் தேதியில் கூட்டம் நடக்கும் என்பது பற்றி முடிவு செய்யவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

no-date-fixed-for-ipls-gc-meeting-bcci-awaiting-financial-report

author img

By

Published : Jun 22, 2020, 7:43 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் நிச்சயம் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் டி20 உலகக்கோப்பைத் தொடர் பற்றி ஐசிசி முடிவு எடுக்காமல் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் இந்த வாரத்தில் நடக்கவிருக்கிறது. அதில் ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், '' ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நடக்கவுள்ள தேதி பற்றி முடிவு செய்யவில்லை. பிசிசிஐ மார்க்கெட்டிங் குழுவினர் பொருளாதார அறிக்கைக்காக காத்திருக்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீன ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், சீன பொருள்களை புறக்கணிக்கக் கோரி இந்திய அளவில் குரல்கள் ஒலித்து வருகிறது. இதனால் ஐபில் தொடரின் ஸ்பான்சராக உள்ள சீன கம்பெனியின் ஒப்பந்தம் பற்றிய முடிவினையும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.