நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 91 ரன்களை எடுத்தார்.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு பிஜே வாட்லிங், மிட்சல் சாண்ட்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயத்தினர். இதில் வாட்லிங் இரட்டை சதமடித்தும், சாண்ட்னர் சதமடித்தும் அசத்தினர். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 615 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
-
Neil Wagner gets his third!
— ICC (@ICC) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jos Buttler is dismissed for a duck. New Zealand are closing in on victory at Bay Oval.
Follow #NZvENG live 👇https://t.co/IdOtHFVZap pic.twitter.com/ldiPFH9jU2
">Neil Wagner gets his third!
— ICC (@ICC) November 25, 2019
Jos Buttler is dismissed for a duck. New Zealand are closing in on victory at Bay Oval.
Follow #NZvENG live 👇https://t.co/IdOtHFVZap pic.twitter.com/ldiPFH9jU2Neil Wagner gets his third!
— ICC (@ICC) November 25, 2019
Jos Buttler is dismissed for a duck. New Zealand are closing in on victory at Bay Oval.
Follow #NZvENG live 👇https://t.co/IdOtHFVZap pic.twitter.com/ldiPFH9jU2
பின்னர் 262 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி சாண்ட்னரின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூட், ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால், இங்கிலாந்து அணி தற்போது வரை எட்டு விக்கெட்டுகளை இழந்து, இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
இதையும் படிங்க: 53 போட்டிகளில் 33 வெற்றி... ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த கோலி